திருப்புகழ் பாடல் 296 – திருத்தணிகை
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன …… தனதான
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள …… ரதிபார
முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ …… இணைகோட
அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர …… மதநீதி
அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை …… நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட …… டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட …… ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி …… யெனவேநீள்
சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல …… பெருமாளே.