வில்லெடுத்து விளையாடும் தெய்வமே – பக்தர்
இதயமாம் நீலவானில் – மன
வில்லெடுத்து தத்துவம் சொன்னவனே
பலநிறம் சேர்ந்து தான் மனவில்லென்பது
மன ஒற்றுமை ஒன்றுதான் ஜெயமந்திரம்
ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து)
உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய்
உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய்
உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய்
உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய்
அளவில்லா ஆசைகளை மணிகண்டா நீ
அளவில்லா ஆசைகளை மணிகண்டா நீ – எங்கள்
குறை நீக்கிடு ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து)
கல்லாகும் சொல்லாலே மனிதரை வாட்டும்
நல்வழி செல்லா மனமும் சினத்தைக் கூட்டும்
கல்லாகும் சொல்லாலே மனிதரை வாட்டும்
நல்வழி செல்லா மனமும் சினத்தைக் கூட்டும்
இனி உன்னருளாலன்றோ மனிதரின் நிலை
இனி உன்னருளாலன்றோ மனிதரின் நிலை இங்கு
நீ தீமைகளை கொய்திடுவாய் ஐயா சரணம் ஐயப்பா
ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து)