Abirami Andhathi Lyrics in Tamil – Songs 1 to 10

காப்பு(கட்டளை கலித்துறை)

தாரமர்கொண்ர்ரையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு ஏழும்பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் ஏன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.

நல்வித்தையும் ஞானமும் பெற

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்விழுத்துனையே. 1

பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச்சிலையுமேன் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே. 2

சம்சார பந்தம் நீங்க

அறிந்தேன் ஏவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்.
மறிந்தே விழுநரகுக்குற வாய மனிதரையே. 3

உயர் பதவிகள் பெற்றிட

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக்கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் ஏன் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4

மனக்கவலை மறைந்திட

பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சிமருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5

மந்திரசித்தி பெற்றிட

சென்னியது உன் பொற்றிருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியதுன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியதென்றும் உன்றன் பரமாகம பத்ததியே. 6

துன்பம் நீங்கிட

துதியுறும் மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலே தார்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே. 7

நல்லறம் சிறக்க

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8

இறையருள் பெற்றிட

கருத்தன எந்தை தன் கண்ணன் வண்ணக் கனக வெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தனபாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தேன் முன்னிற்கவே. 9

முக்திப்பேறு பெற்றிட

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமாரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே. 10