எல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய்
பொன் ஐயா சபரிவாசா (எல்லா)
பொல்லா நோய்களும் நீங்கிடவே
மலர்க்கையால் அருள்புரிவாய் – தேவா
எம்மை ஆதரிப்பாய் (எல்லா)
பாழாய் நாளைப் போக்காமல் உன்
நாமம் நாவால் உரைப்போமே
மாயாலோக வாழ்க்கையில் மதபேதப்
பேய்கள் ஓட்டிடுவோம்
போகம் தேடி அலைந்து திரிவோர் ஒரு கண
சுகமென அறியாரே (எல்லா)
கைகளும் கால்களும் தளர்ந்திடவே
மனமதும் அவதியில் துடித்திடவே
அகிலாண்டேசுவரா அபயம் நீ என்று
அறிந்திட்டோம் நாங்கள் அழைக்கின்றோம்
சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா (எல்லா)