கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை
மணிகண்டன் வாழும் உயர்ந்தமலை சபரிமலை (கனிவோடு)
ஓங்கார நாதமெனும் வேதமலை – அன்பர்
ஒற்றுமையாய் நாமம் சொல்லும் தெய்வமலை (கனிவோடு)
தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர
தெய்வமகன் பவனி வந்த சபரிமலை
தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர
தெய்வ மகன் பவனி வந்த சபரிமலை
கண்ணில்லார்க்கு கண் கொடுக்கும் சாந்திமலை
பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் தெய்வமலை (கனிவோடு)
காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக
பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட
காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக
பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட
ஜோதியாகி சபரி மோட்சம் தந்த தெய்வம்
சொன்னான் தான் வாழும் புனிதத்தலம் சபரிமலை ( கனிவோடு)