வாவரு சாமிக்கு காணிக்கை போட்டு
என்னையே அர்ப்பித்து ஐயனின் கால்களைத் தொட்டு
அருத்திங்கள் கோயிலில் மாலை கழற்றி
அனைவரும் ஒரே சாதியென்றறிந்தேன்
மனிதர்கள் ஒரே சாதியென்றறிந்தேன்
கொச்சு தொம்மன் சாமியுண்டு கூட்டத்தாருண்டு
உற்ற தோழன் வாபருண்டு சுற்றத்தாருண்டு
எங்கும் சுற்றத்தாருண்டு
பொம்மனும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை
தேகபலம் தரும் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை
பாண்டி நாட்டில் வணங்கும் போல உலகமெல்லாமே-நம்ம
பஞ்சபூதநாதன் புகழ் பாடி மகிழ்வோம்
சமநிலைபெறனும் நல்ல நட்பு பெருகனும்
எம்மதமும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை
தேகபலம்தரும் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை
சாந்தி தேடும் உலகில் மனித இதயமுன்பாக-இந்த
சாதி விலகி ஐயப்ப ஜோதி தெரியணும்
தீமை அழியனும் பெரும் நன்மை பெருகணும்
பொம்மனும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை
தேகபலம் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை.