ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் | Noi Theerkum Sivan Manthiram in Tamil

நோய் தீர தினமும் சொல்ல சிவனின் நோய் தீர்க்கும் பதிகம்

ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் – திருநீற்றின் மகிமையை உணர்த்தும் ஞான சம்பந்தர் அருளியது நோய் தீர்க்கும் பதிகம்

மந்திரம் ஆவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரம் ஆவது நீறு. துதிக்கப்படுவது நீறு. தந்திரம் ஆவது நீறு. சமயத்தில் உள்ளது நீறு. செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாய் திருநீறே!

வேதத்தில் உள்ளது நீறு. வெந்துயர் தீர்ப்பது நீறு. போதம் தருவது நீறு. புன்மை தவிர்ப்பது நீறு. சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயாம் திரு நீறே!

முக்தி தருவது நீறு. முனிவரணிவது நீறு. சத்யம் ஆவது நீறு. தக்கோர் புகழ்வது நீறு, பக்தி தருவது நீறு. பரவ இனியது நீறு. சித்தி தருவது நீறு, திரு ஆலவாயான் திருநீறே!

காண இனியது நீறு. கவினைத் தருவது நீறு. பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு. மரணம் தகைவது நீறு. மதியைத் தருவது நீறு. சேணம் தருவது நீறு. திரு ஆலவாயான் திருநீறே!

பூச இனியது நீறு. புண்ணியமாவது நீறு. பேச இனியது நீறு. பெருந்தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கொடுப்பது நீறு. அந்தமாவது நீறு. தேசம்புகழ்வது நீறு. திரு ஆலவாயான் நீறே!

அருத்தமாவது நீறு. அவல மறுப்பது நீறு, வருத்தம் தணிப்பது நீறு, வானம் அளிப்பது நீறு. பொருத்தம் ஆவது நீறு. புண்ணியர் பூசும் வெண்ணீறு. திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

எயிலது அட்டது நீறு. இருமைக்கும் உள்ளது நீறு. பயிலப்படுவது நீறு. பாக்கியாமாவது நீறு. துயிலை தடுப்பது நீறு. சுத்தமாவது நீறு. அயிலைப் பொலிதரு சூலத் திரு ஆலவாயான் திருநீறே!

இராவணன் மேலது நீறு. எண்ணத் தகுவதுநீறு. பராவணம் ஆவது நீறு. பாவம் அறுப்பது நீறு. தராவணம் ஆவது நீறு. தத்துவம் ஆவது நீறு. அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே!

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக் கண் திகைப்பிப்பது நீறு. கருத இனியது நீறு. எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு. அண்டத்து அவர் பணிந்து ஏத்தும் ஆலவாயன் திருநீறே!

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

அபிராமி பட்டர் அருளியது

மணியே! மணியின் ஓளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பதம பாதம் பணிந்த பின்னே!