2017 சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 55/100
When is Sani Peyarchi in 2017?
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்
மனசாட்சிக்கு மதிப்பளித்து நடக்கும் விருச்சிக ராசிக்காரர்களே…
இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
உங்களை அவமானப்படுத்தியவர் கள்கூட, வலிய வந்து மதித்துப் பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீண் பயம் விலகும். உறக்கமில்லாமல் தவித்தவர்களுக்கு அந்த நிலை மாறும். ஆனாலும், உணவுக் கட்டுப்பாடும், எளிய உடற்பயிற்சியும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவர் உற்சாகம் அடைவார். கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். பார்வைக்கோளாறு, பல்வலி வந்து நீங்கும். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவேண்டாம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்கள் தடைப்பட்டு முடியும். சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
வியாபாரிகளே! விளம்பர யுக்திகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக நடைபெறும். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவகம், இரும்பு வகை களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
மாணவ – மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய நிறுவனத்திலேயே உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்படும். கலைத்துறையினரே! வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைநயம் மிகுந்த உங்கள் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டிப் பேசப்படும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவுகளும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்க ளால் திடீர் திருப்பங்கள் உண்டு. சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும்.
பரிகாரம்:
சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
Source: Vikatan.com