கால பைரவரை அஷ்டமி திதியில் ராகு நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பாகும்.
கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீரடையும்.
மிளகு தீபம் ஏற்றுவது எப்படி?
- ஒரு வெள்ளை நிற புதியத் துணியில், 27 மிளகுகளை எடுத்து, துணியை முடிந்து திரி போல முடிந்து கொள்ள வேண்டும்.
- பிறகு மிளகைத் துணியோடு நல்லெண்ணையில் ஒரு இரவு முழுவதும் நனைத்து வைக்க வேண்டும்.
- அடுத்த நாள், இந்த மிளகு முடியை நல்லெண்ணையுடன் சேர்த்து ஒரு அகல் விளக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- விளக்கை கால பைரவர் முன்பு ராகு நேரத்தில் ஏற்றி, கால பைரவாஷ்டகத்தைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.
மிளகு தீபத்தின் முக்கியத்துவம்:
- மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவதால் நவக்கிரக தோஷங்களின் பாதிப்புகளை குறைக்கலாம். மிக முக்கியமாக ராகு திசை மற்றும் ராகு புத்தியில் மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிப்பட்டால் ராகுவினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கலாம்.
- 27 மிளகுகள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.
- கால பைரவரை வழிபட உகந்த நேரம் ராகு காலம் ஆகும்.
- கால பைரவரை வழிபட உகந்த திதி அஷ்டமி திதியாகும். அதிலும் தேய்பிறை அஷ்டமி கூடுதல் சிறப்பு.
- மிளகு தீபம் ஏற்ற அகல் விளக்கை பயன்படுத்துவதைக் காட்டிலும் பூசணிக்காய் விளக்கு அல்லது தேங்காய் விளக்கு ஏற்றி வழிப்படுவதால் சிறந்த பலன்கள் உண்டாகும்.