Tag «ayyappan songs tamil veeramanidasan»

Sarakondrai Poothiruku Chithirai – Ayyappan Bajanai Songs

சரக்கொன்றை பூத்திருக்கு – சித்திரை சரக்கொன்றை பூத்திருக்கு சபரி மாமலையில் விசுக்காலை (சரக்) பக்தி கனிதும்பை பூத்திருக்கு – சபரிமலையில் கனி தும்பை பூத்திருக்கு நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர் தமிர் தமிர் தமிர் தமிர் தம் (சரக்) நெய்யமுதக் குடமெடுத்து காயத்ரி மந்த்ரம் சொல்லி இருட்டு நிற கருப்புடுத்தி பனி இரவில் விளக்கேந்தி – சூர்யன் சபரிகிரி தன்னில் முகில்முடிகளில் இருவிழிகளில் மலரடிகளில் விசு சங்கராந்தி – மலையில் பரமபக்தி கனி தும்பை பூத்திருக்கு …

Suriya Chanthiranin Kannazhakodu – Ayyappan Bajanai Songs

சூரிய சந்திரனின் கண்ணழகோடு அரிமா தேவனின் மெய்யழகோடு சங்கு கழுத்திலோ பொன்மணியோடு பஞ்குனி மாதத்தில் உத்திர நாளில் பஞ்சமி திதியில் பிறந்தானய்யன் (சூரிய) எங்கெல்லாம் சென்றவன் வந்தான் – ஐயன் என்னென்ன கோலம் எடுத்தான் பாதிரத்தின் மலையில் கருங்காடு கலக்கி பாண்டிக் கரிமலையில் வேட்டையாடினான் – அரசன் பம்பை நதிக் கரையோரத்திலே குழந்தை மணிகண்டனைக் கண்டெடுத்தான் கண்மணியாய் அரண்மனையில் வளர்ந்தான் ஐயன் குழந்தை இளவரசாய் பந்தளத்தில் வாழ்ந்தான் ஐயன் அரண்மனையில் வளர்ந்தான் ஐயன் பேர் பெற்ற பந்தளத்திளவரசன் …

Aayiram Raagam Aayiram Thaalam – Ayyappan Bajanai songs

ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம் ஆயிரமாயிரம் பல்லவிகள்-அதில் ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும் ஓங்கார நாதமாம் சபரிமலை (ஆயிரம்) நீலாகாசமும் மரகத பூமியும் ஆனந்த சங்கீத தாரையாக அர்ச்சனை மந்திரமும் ஜீவநாளங்களும் உன்முன்னால் கைகூப்பி தொழுதிடவே மனமுருகி மெய்மறந்து நின்றேனே நான் ஊமை அமுதம் ருசித்தது போல் (ஆயிரம்) கோடி ஜென்மங்களில் இரவும் பகலும் சிந்திய கண்ணீர் உறைந்ததாவா-அருளொளி மணிகண்டன் பாதங்கள் அலங்கரிக்க துளசி இலை கண்ட பாக்கியம் தர்சன பாக்கியமாம் தீர்த்த முன்டேனே நான் ஊமை …

Mahishiyai Theiveega Karunai – Ayyappan Bajanai Songs

மகிஷியைத் தெய்வீகக் கருணை கொண்டொரு தேவ கன்னிகையாக்கி-தேவியை மாளிகைப் புறமேற்றி இடது பாகம் தந்து உலக மாதாவென்று வாழ்த்தி-ஐயன் பிரம்மச்சர்ய கோலம் கொண்டான் (மகிஷி) ஸ்ரீராமசுவாமிக்கு காய்கனி நெய்வேதித்த சபரியாம் சத்யாத்ரி புத்ரி கடித்து ருசி பார்தது நெய்வேதித்த பாபமோ சபரியை யுகங்களாய் குரூபியாக்க சபரியை கலியுக ராஜகுமாரன் மரகத அழகியாய் தோற்றுவித்தான் (மகிஷி) சதியாகப் புலிப்பாலை கேட்டோர்க்கும் கூட அஷ்டைசுவர்யங்களைத் தந்து-மாயாய் இருள் கொண்ட பந்தள ராணியை விஸ்வரூபத்தால் அனுக்ரஹித்து அசுர கர்மத்தால் விளையாடின வாபருக்கு …

Paruvangal Aarum Pambanathiyil – Ayyappan Bajanai Songs

பருவங்கள் ஆறும் பம்பாநதியில் குளித்து திருப்படி ஏறும் கரங்கள் ஏழின் அலைமுறை எல்லாம் பாதசரணம் பாடும் (பருவ) நாமம் கேட்கும் ரசம் ஐயனின் நாமம் கேட்கும் சுகம் ஆடும் மலைமுகில் சூடும் மலையினில் தவழும் இளந்தென்றல் அடவிகள் தாளமுணர்த்தி பாடும் பதவஜனம் புண்யம் சபரீசன் பதவஜனம் புண்யம் (பருவ) அழகின் இருமுடி ஏந்தி ஆனந்தக் கண்ணீர் தெளிக்கும் மேகம் வானவில் தம்புரு மீட்டிப்பாடும் பதமலர்கள் சரணம் ஐயனின் பதமலர்கள் சரணம் (பருவ) தங்க கம்பி முறுக்கி பூபாளராகமாலாபனை …

Thakirthithan Thottathil Mukkannan – Ayyappan Bajanai Songs

தகிர்தித்தான் தோட்டத்தில் முக்கண்ணன் திருமலையின் ஸ்ரீமூலத் திருமரமாய் பூத்து நிற்க பகவான் பூஞ்சுவடில் பூஜித்த யவன கன்னிகையை ஜீவ கலகமாய் பாவிக்க தேவ மகரந்தம் ஸ்ரீ ரூப அலங்காரம் வாபராய் பூமியில் பிறப்பெடுத்தான் (தகிர்) நாலாம் வேதத்தின் பொருளறிந்து மானிட நட்பெனும் ஆனந்த தத்துவம் அத்வைத ரூபனாம் ஐயனின் தோழனாகி பந்தள பெரும் படைக்கு தலைமை தாங்கி (தகிர்) உதயனைப் போரில் வென்று பூஜை செய்தான் வாபர் பகவானின் பாதாரவிந்தமே குருசபரீசனின் தாஸானு தாஸனாக எரிமேலி பேட்டையில் …

Prakasa Suriya Kathiroliyil – Ayyappan Bajanai Songs

பிரகாசச் சூரிய கதிரொளியில் சிவந்து சிரிக்கும் பொன் ஆகாயம் கரிமலை இளங்குளிர் சோலையிலே தங்கிடும் சபரி க்ஷேத்திரமே மந்த்ரம் விண்முட்டி ஒலிக்கும் தேவ வசந்தத்தினூடே சங்கம சொப்பனங்கள் சங்கீதம் தேடும் சங்கம சொப்பனங்கள் சங்கீதம் தேடும் அருண முகூர்த்தத்தினூடே (பிரகா) பிரபஞ்சம் சுசுருதி தேடும் தேவிரநிசாதத்தினூடே ஜீவன சங்கீதம் மோட்சத்தைத் தேடும் ஜீவன சங்கீதம் மோட்சத்தைத தேடும் வேதமாம் ஞானத்தினூடே (பிரகா) நாதம் சரணமந்திரம் மூழும் கோயில் பிரகாரங்களினூடே மௌன ராத்திரிகள் பௌர்ணமி தேடும் மௌன ராத்திரிகள் …

Sabarimalaiyil Thazhnthe Vazhinthidum – Ayyappan Bajanai Songs

சபரிமலையில் தாழ்ந்தே வழிந்திடும் புண்ணிய நதியாம் பம்பா சபரிமலையினில் மேலாய் வழிந்திடும் சரணமந்திரமாம் பம்பா பம்பா நதிகள் வளம் செய்யும் சன்னிதி எத்தனை தூய்மை ஐயப்பா எத்தனை தூய்மை எத்தனை தூய்மை (சபரி) எரிமேனிப்பேட்டைதுள்ளி வரும் கன்னிமலையாரும் பதினெட்டாம் முறை மலைக்கு வருகின்ற குருசாமியோரும் பக்தியாம் நெய்யபிஷேகம் செய்யும்-உன் அழகுடை ரூபம் ஐயப்பா எத்தனை தூய்மை (சபரி) ஜீவன் முக்தராய் ஆகுகின்ற பரமசித்தர்கள் தாமும் இருமுடி கட்டும் ஏந்தி சரணம் பாடுகின்ற பக்தர்களும் ஒன்றுபோல் உந்தன் திருவடி …

Kailasa Thirumalaiyil Thiruvedan – Ayyappan Bajanai Songs

கைலாசத் திருமலையில் திருவேடன் ரூபம் கொண்டு திருவேடப் பெண்ணோடு வந்து பூதப்படை முரசமுழக்க திருவேட்டையாட திருவேட்டையாட திருவேட்டையாட (கைலாச) மதயானை கொம்பொடித்து களிமண்ணில் தினைவித்து எடுத்து விதைத்து வேடப் பெண்ணாள் வெள்ளி வெயில் சாந்தணிந்து செந்தினை பூத்து அம்பினால் காவல் காத்த பூத்திருவேடன் (கைலாச) மறுமலையில் போரழைப்பு காற்றில் ஒலிக்க செஞ்சடை மேல் அம்புதைக்க வேடன் கோபிக்க அம்பெல்லாம் மலரம்பாக்கினாள் வேடப் பெண்ணாள். கைலாசம் பூமலையாக திருவாதிரை இரவாக (கைலாச) கல்லும் முள்ளும் நிறைந்த வனத்தில் நான் …