Vanpuliyin Meethinile – Ayyappan Songs
வன்புலியின் மீதினிலே வன்புலியின் மீதினிலே, ஏறி வீர மணிகண்டனே வா…. ஐயப்பா வீர விளையாடல்களை பாட வாணி தடை கூறவில்லை கொஞ்சி கொஞ்சி பேசும் உந்தன், அந்த பிள்ளை மொழி கேட்டிடவே….ஐயப்பா பந்தலத்தான் செய்த தவம், இந்த பாமரன் நான் செய்யவில்லையோ வில்லும் அம்பும் கையில் எதற்கோ, அந்த வாவரை தான் வெற்றி கொள்ளவோ… ஐயப்பா வினைகளின் துயரங்களை, வந்து வேட்டையாடி விரட்டிடவோ பால் எடுக்க புலி எதற்கோ, உந்தன் பார்வை என்ன சக்தி அற்றதோ…. ஐயப்பா …