Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்
நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள்.
போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.
அந்தவகையில், ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.
சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 மீனம் ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மீனம் | Meenam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil
எப்போதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை கவரக்கூடியவர்கள் மீனம் ராசியினர். நீங்க வரும் நாட்களில் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பதும், சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
நீண்ட நாட்களாக வாங்க நினைத்த நவீன பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொலைதூர பிராயணங்களை தவிர்க்கவும்.
ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மீனம் – பணி வேலை எப்படி இருக்கும்?
உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடம் மாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும், முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. அரசியல்வாதிகளை பொறுத்தவரை, மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கலைஞர்களுக்கு உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மீனம் – தொழில்/வியாபாரம் எப்படி இருக்கும்?
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சில சிக்கல்கள் வந்து சேரும்.
அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விலைப் பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மீனம் – உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
மனைவி பிள்ளைகளுக்கு உண்டாகக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதும் நல்லது.
ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மீனம் – குடும்பம் வாழ்க்கை எப்படி இருக்கும்?
பெண்களுக்கு கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதும், கணவர் வழி உறுப்பினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூல பலன்களை அடைய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும்.
ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மீனம் – மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?
மாணவ மாணவியர்கள் கல்வியில் கவனமாக செயல்பட்டால் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்பது
அதிர்ஷ்டக் கிழமை: வியாழன், ஞாயிறு,
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் சிவப்பு
மீனம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி 2023- 2025 பரிகாரம்
- விநாயகரை வழிபடுவதும், செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது.
- கருப்பு எள், போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது மிகவும் நல்லது.
- குரு காயத்ரி மந்திரம், விநாயகர் காயத்ரி மந்திரம் போன்றவற்றால் துதித்து இறை வழிபாடு செய்வது.
- விநாயகர் அகவல் படிப்பதும் கேட்பதும் நலம்.
- ராகு காயத்ரி மந்திரம், கேது காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லி வழிபடலாம்.
Navagraha Lords Tamil Mantras – நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்