நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன்
நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன்
உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2)
நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்
நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்
உன் நாமமே துணை என நடந்து வந்தேன்
உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்)
சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி
இன்பமே மெய்யப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி
இன்பமே மெய்யப்பா
காப்பது நின்னடி கமல மலர்
நினைக் காண்பது நல்லக் காலமன்றோ
காப்பது நின்னடி கமல மலர்
நினைக் காண்பது நல்லக் காலமன்றோ
ஏற்பது இன்னருள் பொங்கும் வெள்ளம்
ஏற்பது இன்னருள் பொங்கும் வெள்ளம்
இனி என்றைக்கும் தாழ்வு என் அன்பு உள்ளம்
இனி என்றைக்கும் தாழ்வு என் அன்பு உள்ளம் (நாற்பது நாட்கள்)
சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி
மகிமைமே மெய்யப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி
மகிமைமே மெய்யப்பா
சேர்ப்பது இருமுடி தலையினிலே
பின் தரிசனம் சபரிமலையினிலே
சேர்ப்பது இருமுடி தலையினிலே
பின் தரிசனம் சபரிமலையினிலே
கேட்பது சரணம் எனும் குரல்கள்
கேட்பது சரணம் எனும் குரல்கள்
உடன் கிடைப்பது வாழ்வினில் பல நலங்கள்
உடன் கிடைப்பது வாழ்வினில் பல நலங்கள்
நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன்
உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன்
நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்
நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்
உன் நாமமே துணை என நடந்து வந்தேன்
உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்)
சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி
இன்பமே மெய்யப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி
மகிமைமே மெய்யப்பா