Thiruppugazh Song 186 – திருப்புகழ் பாடல் 186

திருப்புகழ் பாடல் 186 – பழநி

தனன தனன தனத்த தனன தனன தனத்த
தனன தனன தனத்த …… தனதான

முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி …… னிடையோடி

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி …… வருமாதர்

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி …… விடுமாய

மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை …… யருள்வாயே

சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த …… தகவோடே

தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் …… மருகோனே

அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து …… வருவோனே

அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து …… பெருமாளே.