Tag «ayyappan songs lyrics in tamil»

Santhanam Manakuthu Panneer Manakuthu Sabarimalai mele

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே இள‌ …

Eli Varuthu Eli Varuthu Parungo – Ayyappan Gurusamy Bajanai Songs

எலி வருது ..எலி வருது ..எலி வருது பாருங்கோ! குழு: ஓடி வருது பாருங்கோ ஆடி வருது பாருங்கோ எலி மேலே கணபதி தான் அமர்ந்து வர்றார் பாருங்கோ குழு: எலி மேலே கணபதி தான் அமர்ந்து வர்றார் பாருங்கோ *** மயிலு வருது.. மயிலு வருது ..மயிலு வருது பாருங்கோ! குழு: பறந்து வருது பாருங்கோ ஆடி வருது பாருங்கோ மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்து வர்றார் பாருங்கோ குழு:மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்து வர்றார் …

ஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம் – Ganesha Saranam

ஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம் கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா மூஷிக வாஹன சரணம் கணேஷா மோதகஹஸ்தா சரணம் கணேஷா வாமண ரூபா சரணம் கணேஷா மகேஸ்வர புத்ரா சரணம் கணேஷா சங்கர சுதனே சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா சாமர கர்ணா சரணம் கணேஷா விளம்பித சூத்ரா சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் …

Ponal Sabarimalai Kettal Sarana Kosham – Ayyappan Bajanai Songs

சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால் ) மண்டல காலத்தில் மாலை அணிந்து ‍‍- சாமி சரணம் ஐயப்ப சரணம் மணிகண்ட‌ நாமம் …

Venpani Kulirinil Pothikaimalai – Ayyappan Bajanai Songs

வெண்பனிக் குளிரினில் பொதிகைமலை மென் தென்றல் வீசிடும் சபரிமலை விண்ணவனும் போற்றிடும் கண்கொள்ளாக்காட்சியே காந்தமலைஜோதி ஐயப்ப சுவாமி (வெண்) சுடரும் விளக்கொளியில் அருள் வடிவாய் தூண்டா மணி விளக்கின் எழில் உருவாய் வேண்டியவர் வேண்டியதை ஐயப்பன் தந்திடுவான் கீதங்கள் பாடிச் செல்வோமே சபரிமலை (வெண்) நம்பிய பக்தர்களின் நாயகனாய் நலிந்தவர் வாழ்வினிலே நலம் தருவான் இருமுடீ தாங்கியே திருவடி காணவே அடியவர் ஒன்றாய் அடைவோமே சபரிமலை (வெண்)

Saranam Saranam Ayyappa Sami Saranam Ayyappa

சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா யானைமேல் அம்பாரிகாணவே ஆனந்தம் ஐயப்பன் திருக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நல்லகுல தெய்வமய்யா ஐயப்பா நாளும் நம்மை காத்திடும் ஐயப்பா (யானை) எரிமலைப்பேட்டை துள்ளி காளைகட்டி வணங்கிவிட்டு அழுதைமலை நதியடைந்து தள்ளிப்போ கல்லிடும் குன்றில் உடும்பாறை மலையுச்சி கரிவலம் தோடும் தாண்டி கரிமலைமீது ஏறி பம்பைநதி அடைந்தோம் (யானை) கண்ணிமூலகணபதியை வணங்கியே நீலிமலை கடந்தோம் அப்பாச்சி இப்பாச்சிதனை அடைந்தோம் சபரிபீடம் கண்டு சரங்குத்தி தொழுது …

Ullathil Unnaiye Theivamai Enniye – Ayyappan Bajanai Songs

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே சன்னிதானம் நாடியே சரணடைந்தேன் அருளை அள்ளி அள்ளி தந்து காக்கவே மலைமேல் அமர்ந்திருக்கும் இறைவா ஐயப்பா ஸ்ரீசிவஹரி பாலா (உள்ள) பந்தளத்தின் மன்னனே பார்புகழ்நாதனே எந்தன் மனம் வாழ்த்திப்பாடும் தேனமுதே கைகுவித்து வணங்கிட மெய்குளிரச் செய்பவனே தைமகரஜோதியான ஆண்டவனே சத்தியத்தின் நாயகன் புத்திரத்துப்பிறந்ததை வண்ணமலர் சோலையாம் வையகமும் வாழ்த்துதே ஐயா சரணம் ஆண்டருள் என திருவடி பணிந்தேன் (உள்ள) விண்ணகத்தின் நிறங்களே உந்தன் நிறமாகும் மண்ணகத்தின் மைந்தனே மாமணியே என்னகத்தில் உண்மையாய் …

Aiya Unaiye Paninthene – Ayyappan Bajanai Songs

ஐயா உனையே பணிந்தேனே ஆறுதல் வழங்கி அருள்வாயே மனமே உரகிடப் பாடுகின்றேன் மாமலை ஜோதியே சரணமய்யா (ஐயா) உள்ளத்தில் அமைதியும் உடலினில் உறுதியும் நல்லதே நினைவினில் வேண்டுமய்யா கற்பகத் தருவாகி கருணையில் கடலாகி வரம் தந்து நீயே காத்திடய்யா சொந்தபந்தம் யாவும் நீயே சொல்லும் சுகங்கள் யாவும் நீயே வளம் நலம் தருவாய் நீயே வாராய்தேவா (ஐயா) தொட்டதுதுலங்கிடவும் சொல்லினில் அருள் வேண்டும் தித்தித்திடும் நினைவு தினம் வேண்டும் பக்தியுடன் உனைப்பாட பக்தனுக்கு வேண்டியதை பரிவுடன் அருள்வாய் …

Aayiram Kodi Thaaragai Sernthu – Ayyappan Bajanai Songs

ஆயிரம் கோடி தாரகை சேர்ந்து பூரண ஒளிதரும் பூநிலவே மார்கழி மலராய் வான் வழிமீது காண்கின்ற நிலவே கண்மலராய் (ஆயிரம்) தத்தித்தத்தி நடைபயன்று தரணியை அளப்பவனே சங்கத்தமிழ் இசையில் தாலேலோ முல்லை இதழ் விரிய முத்துச்சரமணிந்து கொத்துமணிஅசையும் செல்வ மணியே செல்வமணியே (ஆயிரம்) மாலை மலர் மணத்தில் மதிமுகம் எழில்பூத்து தாலாட்டும் தென்றலில் தாலேலோ நாளை வரும் வாழ்வு நல்வாழ்வு நீ அறிவாய் நலம்பெறத் தொட்டிலே ஐயப்பனே கண்மலராய் (ஆயிரம்)