
புரட்டாசி இது தமிழ் மாதங்களில் ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.
இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள்.
அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.
இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பிணி அதிகமாக வரும். ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரணம் ஆககூடிய உணவு வகைகளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.
Read More:
Why don’t we eat non veg foods in the month of Purattasi?
Importance of Mahalaya Amavasya in Tamil
Purattasi Viratham Scientific Reason
Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal
Purattasi-Story,Significance And Spirituality-தமிழ் மாதங்களில் புரட்டாசி
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?