Thiruppugazh Song 203 – திருப்புகழ் பாடல் 203

திருப்புகழ் பாடல் 203 – சுவாமி மலை
ராகம் – நாட்டகுறிஞ்சி ; தாளம் – அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2

தானான தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன …… தந்ததான

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையைய …… டைந்துளாமே

ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி
யாதீத மகளமெப் போது முதயம …… நந்தமோகம்

வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலம …… சங்கையால்நீள்

மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிருபமு
மாறாத சுகவெளத் தாணு வுடனினி …… தென்றுசேர்வேன்

நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி …… லங்கைசாய

நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரக …… டம்பவேலா

கானாளு மெயனர்தற் சாதி வளர்குற
மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடை …… நெஞ்சுபாய்தல்

காணாது மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்஡ணதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை …… தம்பிரானே.