முகுந்த மாலா 29 | Mukunda Mala Stotram 29 in Tamil with Meaning
முகுந்த மாலா 29 | Mukunda Mala Stotram 29 in Tamil with Meaning மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யேமனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி |ஹரனயனக்ருஶானுனா க்ருஶோ(அ)ஸிஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே꞉ || 29 || விளக்கம்: மன்மதனே முகுந்தனின் திருவடித் தாமரை இருக்குமிடமான என்னுடைய மனத்தில் இருத்தலை விட்டுவிடு. சிவனின் கண்ணாகிய அக்னியினால், அழிந்திருக்கிறாய். முராரியான விஷ்ணுவினுடைய சக்கராயுதத்தின் பராக்கிரமத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லையா?