Tag «முகுந்தமாலா ஸ்தோத்ரம்»

Mukunda Mala Stotram in Tamil with Meaning

Mukunda Mala Stotram in Tamil with Meaning முகுந்த மாலா 1 | Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning …

முகுந்த மாலா 40 | Mukunda Mala Stotram 40 in Tamil with Meaning

முகுந்த மாலா 40 | Mukunda Mala Stotram 40 in Tamil with Meaning யஸ்ய ப்ரியௌ ஶ்ருதித⁴ரௌ கவிலோகவீரௌமித்ரௌ த்³விஜன்மபத³பத்³மஶராவபூ⁴தாம் |தேனாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷட்பதே³னராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஶேக²ரேண || 40 || கும்பே⁴புனர்வஸௌஜாதம் கேரளே சோளபட்டணே |கௌஸ்துபா⁴ம்ஶம் த⁴ராதீ⁴ஶம் குலஶேக²ரமாஶ்ரயே || இதி முகுந்த³மாலா ஸம்பூர்ணா || விளக்கம்: எவருக்கு அன்பர்களும் கேள்விஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும், வீரர்களுமான அந்தண-வர்ணங்களில் பிறந்தவர்களான இருநண்பர்கள் இருந்தார்களோ அந்த தாமரை கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவரான குலசேகரர் …

முகுந்த மாலா 39 | Mukunda Mala Stotram 39 in Tamil with Meaning

முகுந்த மாலா 39 | Mukunda Mala Stotram 39 in Tamil with Meaning க்ஷீரஸாக³ரதரங்க³ஶீகரா –ஸாரதாரகிதசாருமூர்தயே |போ⁴கி³போ⁴க³ஶயனீயஶாயினேமாத⁴வாய மது⁴வித்³விஷே நம꞉ || 39 || விளக்கம்: பாற்கடலில் அலைத்துளிகளால் நக்ஷத்திரம் உள்ளது போல் பிரகாசிக்கின்ற அழகிய திருமேனி படைத்தவரும், ஆதிசேஷனின் மேனியாகிய படுக்கையில் படுப்பவரும், மதுவென்னும் அரக்கனை அழித்தவருமான ஸ்ரீ லக்ஷ்மி பதியான நாராயணனுக்கு நமஸ்காரம்.

முகுந்த மாலா 38 | Mukunda Mala Stotram 38 in Tamil with Meaning

முகுந்த மாலா 38 | Mukunda Mala Stotram 38 in Tamil with Meaning த்⁴யாயந்தி யே விஷ்ணுமனந்தமவ்யயம்ஹ்ருத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் |ஸமாஹிதானாம் ஸததாப⁴யப்ரத³ம்தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம் || 38 || விளக்கம்: ஸ்ரீ மகாவிஷ்ணு முடிவில்லாதவர்; அழிவில்லாதவர்; எப்பொழுதும் மனதில் குடிகொண்டிருப்பவர்; தன் பக்தர்களுக்கு எப்பொழுதும் அபயமளிப்பவர்; அத்தகைய மஹாவிஷ்ணுவை தியானம் செய்பவர்கள் உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தைச் சேருவார்கள்.

முகுந்த மாலா 37 | Mukunda Mala Stotram 37 in Tamil with Meaning

முகுந்த மாலா 37 | Mukunda Mala Stotram 37 in Tamil with Meaning முகுந்த மாலா 37 அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருஷ்ணகோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி |வக்தும் ஸமர்தோ²(அ)பி ந வக்தி கஶ்சித்அஹோ ஜனானாம் வ்யஸனாபி⁴முக்²யம் || 37 || விளக்கம்: அநந்த, வைகுந்தா, முகுந்தா, கிருஷ்ணா, கோவிந்தா, தாமோதரா, மாதவ, என்று சொல்வதற்கு சாமர்த்தியம் உள்ளவனாக இருந்தும் மக்கள் சொல்வதில்லை மாறாக உலக துக்கங்களிலேயே ஊன்றிப்போய் விட்டனரே.

முகுந்த மாலா 36 | Mukunda Mala Stotram 36 in Tamil with Meaning

முகுந்த மாலா 36 | Mukunda Mala Stotram 36 in Tamil with Meaning ஶ்ரீனாத² நாராயண வாஸுதே³வஶ்ரீக்ருஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே |ஶ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரேஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே || 36 || விளக்கம்: லஷ்மீ பதியே! நாராயணனே! வசூதேவ குமாரனே! கண்ணபிரானே! பக்தர்களின் அன்பனே! சக்கரத்தைக் கையில் ஏந்துபவனே! பத்மநாபனே! அச்சுதனே! கைடபனை அழித்தவனே! ஸ்ரீ ராமா! தாமரைக் கண்ணனே! ஹரியே முராரியே.

முகுந்த மாலா 35 | Mukunda Mala Stotram 35 in Tamil with Meaning

முகுந்த மாலா 35 | Mukunda Mala Stotram 35 in Tamil with Meaning நமாமி நாராயணபாத³பங்கஜம்கரோமி நாராயணபூஜனம் ஸதா³ |வதா³மி நாராயணனாம நிர்மலம்ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் || 35 || விளக்கம்: நான் எப்பொழுதும் ஸ்ரீமந்நாராயணன் திருவடிகளையே வணங்குகிறேன்; அவன் பூஜையையே செய்கிறேன். அவன் திருநாமத்தையே ஜெபிக்கிறேன். நாராயணன் என்னும் தத்துவப் பொருளையே நினைக்கிறேன்.

முகுந்த மாலா 34 | Mukunda Mala Stotram 34 in Tamil with Meaning

முகுந்த மாலா 34 | Mukunda Mala Stotram 34 in Tamil with Meaning தத்த்வம் ப்ரஸீத³ ப⁴க³வன் குரு மய்யனாதே²விஷ்ணோ க்ருபாம் பரமகாருணிக꞉ கி²ல த்வம் |ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³ன-முத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோ(அ)ஸி || 34 || விளக்கம்: ஹே விஷ்ணுபகவானே! முடிவில்லாதவனே! ஹரியே நீ புருஷர்களில் சிறந்தவனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கிறாய் அன்றே. அப்படிப்பட்ட நீ அருள்புரிவாயாக பிறவிக்கடலில் மூழ்கியவனும் ஏழையுமான என்னை கரையேற்றுவதற்கு தகுந்தவனாக இருக்கிறாய்.

முகுந்த மாலா 33 | Mukunda Mala Stotram 33 in Tamil with Meaning

முகுந்த மாலா 33 | Mukunda Mala Stotram 33 in Tamil with Meaning க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு꞉ க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்க்ருஷ்ணே நாமரஶத்ரவோ வினிஹதா꞉ க்ருஷ்ணாய துப்⁴யம் நம꞉ |க்ருஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருஷ்ணஸ்ய தா³ஸோ(அ)ஸ்ம்யஹம்க்ருஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத³கி²லம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் || 33 || விளக்கம்: மூவுலகுக்கும் பெரியோனான கிருஷ்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும் நான் கிருஷ்ணனை வணங்குகிறேன் கிருஷ்ணனால் தேவரின் பகைவர்கள் கொல்லப்பட்டனர் கிருஷ்ணனான உனக்காக நமஸ்காரம் இந்த உலகம் …