Tag «mukunda mala stotram in english pdf»

முகுந்த மாலா 32 | Mukunda Mala Stotram 32 in Tamil with Meaning

முகுந்த மாலா 32 | Mukunda Mala Stotram 32 in Tamil with Meaning தா³ரா வாராகரவரஸுதா தே தனூஜோ விரிஞ்சி꞉ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருத்யவர்க³꞉ ப்ரஸாத³꞉ |முக்திர்மாயா ஜக³த³விகலம் தாவகீ தே³வகீ தேமாதா மித்ரம் ப³லரிபுஸுதஸ்த்வய்யதோ(அ)ன்யன்னஜானே || 32 || விளக்கம்: உன்னுடைய பத்தினி பாற்கடலின் திருமகள் தனையன் பிரம்மா துதிப்பது வேதம் பணிபுரிவோர் தேவரகூட்டம் அநுக்ரஹம் மோக்ஷம் மாயை எல்லா உலகமும் உன்னுடைய தாய் தேவகீ தேவி நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன் …

முகுந்த மாலா 31 | Mukunda Mala Stotram 31 in Tamil with Meaning

முகுந்த மாலா 31 | Mukunda Mala Stotram 31 in Tamil with Meaning இத³ம் ஶரீரம் பரிணாமபேஶலம்பதத்யவஶ்யம் ஶ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் |கிமௌஷதை⁴꞉ க்லிஶ்யஸி மூட⁴ து³ர்மதேநிராமயம் க்ருஷ்ணரஸாயனம் பிப³ || 31 || விளக்கம்: இந்த உடலானது முதிர்ச்சியால் இளைத்ததாகி பூட்டுக்கள் தளர்ந்து போய் நிச்சயமாக விழப்போகிறது. ஓ முடனே, துர்புத்தியே, மருந்துகளால் ஏன் சிரமமப்படுகிறாய். தீமையற்றதான கிருஷ்ணன் என்னும் ரஸாயனத்தை குடிப்பாயாக.

முகுந்த மாலா 30 | Mukunda Mala Stotram 30 in Tamil with Meaning

முகுந்த மாலா 30 | Mukunda Mala Stotram 30 in Tamil with Meaning தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் ப²லானி |ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வேநாமானி நாராயண கோ³சராணி || 30 || விளக்கம்: ஓ நாக்கே கை கூப்பியவனாக இருக்கிறேன் உயர்ந்ததைக் காட்டிலும் உயர்ந்ததும் உண்மைப்பொருளை கூறுபவையும் தேனே பொழிபவைபோல் உள்ளவையும் நல்லவர்களின் பயன்களாகவும் உள்ள நாராயணனைக் குறிக்கும் நாமங்களை ஜபம் செய்.

முகுந்த மாலா 29 | Mukunda Mala Stotram 29 in Tamil with Meaning

முகுந்த மாலா 29 | Mukunda Mala Stotram 29 in Tamil with Meaning மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யேமனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி |ஹரனயனக்ருஶானுனா க்ருஶோ(அ)ஸிஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே꞉ || 29 || விளக்கம்: மன்மதனே முகுந்தனின் திருவடித் தாமரை இருக்குமிடமான என்னுடைய மனத்தில் இருத்தலை விட்டுவிடு. சிவனின் கண்ணாகிய அக்னியினால், அழிந்திருக்கிறாய். முராரியான விஷ்ணுவினுடைய சக்கராயுதத்தின் பராக்கிரமத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லையா?

முகுந்த மாலா 28 | Mukunda Mala Stotram 28 in Tamil with Meaning

முகுந்த மாலா 28 | Mukunda Mala Stotram 28 in Tamil with Meaning நாதே² ந꞉ புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸாஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி |யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேஶமல்பார்த²த³ம்ஸேவாயை ம்ருக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் || 28 || விளக்கம்: மூவுலகங்களுக்கும் ஒரே தலைவனும் மனத்தால் வணங்கத்தக்கவரும் தன்னுடையதான ஸ்தானத்தை அளிப்பவனும் புருஷோத்தமனுமான நாராயணனென்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது சிலக்ரமங்களுக்கு மட்டுமே தலைவனும் சொற்பமாகப் பணம் அளிப்பவனுமான …

முகுந்த மாலா 27 | Mukunda Mala Stotram 27 in Tamil with Meaning

முகுந்த மாலா 27 | Mukunda Mala Stotram 27 in Tamil with Meaning மஜ்ஜன்மன꞉ ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரேமத்ப்ரார்த²னீய மத³னுக்³ரஹ ஏஷ ஏவ |த்வத்³ப்⁴ருத்யப்⁴ருத்யபரிசாரகப்⁴ருத்யப்⁴ருத்ய-ப்⁴ருத்யஸ்ய ப்⁴ருத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² || 27 || விளக்கம்: மது, கைடபன் என்பவர்களை அழித்தவரே என் பிறவிக்கு பயன் இதுதான் (என்றால்) உம்மிடம் வேண்டக்கூடிய எனக்குச் செய்யவேண்டிய அநுக்ரஹம் இதுதான் ஏ உலக நாதனே உன் அடியார்க்கு அடியாரின் என்ற வரிசையில் ஏழாவது அடியானாக என்னை நினைப்பாயாக.

முகுந்த மாலா 26 | Mukunda Mala Stotram 26 in Tamil with Meaning

முகுந்த மாலா 26 | Mukunda Mala Stotram 26 in Tamil with Meaning ஶ்ரீமன்னாம ப்ரோச்ய நாராயணாக்²யம்கேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோ(அ)பி |ஹா ந꞉ பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து³꞉க²ம் || 26 || விளக்கம்: ஸ்ரீயுடன் கூடியதான நாராயணனென்று பெயருள்ள நாமத்தை சொல்லி பாவிகளாக இருப்பினும் எவர்தாம் தாம் விரும்பியதை அடையவில்லை ஐயோ! நமக்கு முன்னம் அதில் வார்த்தையானது சொல்லவில்லை அந்த காரணத்தால் கர்ப்பவாஸம் முதலான துக்கம் அடையப்பட்டது.

முகுந்த மாலா 25 | Mukunda Mala Stotram 25 in Tamil with Meaning

முகுந்த மாலா 25 | Mukunda Mala Stotram 25 in Tamil with Meaning அம்னாயாப்⁴யஸனான்யரண்யருதி³தம் வேத³வ்ரதான்யன்வஹம்மேத³ஶ்சே²த³ப²லானி பூர்தவித⁴ய꞉ ஸர்வே ஹுதம் ப⁴ஸ்மனி |தீர்தா²னாமவகா³ஹனானி ச க³ஜஸ்னானம் வினா யத்பத³-த்³வந்த்³வாம்போ⁴ருஹஸம்ஸ்ம்ருதிர்விஜயதே தே³வ꞉ ஸ நாராயண꞉ || 25 || விளக்கம்: எவருடைய திருவடித் தாமரைகளின் ஞாபகத்தை தவிர்த்துவிட்டு வேதங்களைப் பயிற்சி செய்தல் காட்டுக்கு கதறலாகுமோ தினந்த்தோறும் (செய்யும்) வேதங்களில் கூறிய விரதங்கள் உடலிலுள்ள கொழுப்புநீர் அகல்வதாகிய பலனை உடையதாகுமோ கிணறுக்குளம் வெட்டுவது போன்ற காரியங்கள் அனைத்தும் …

முகுந்த மாலா 24 | Mukunda Mala Stotram 24 in Tamil with Meaning

முகுந்த மாலா 24 | Mukunda Mala Stotram 24 in Tamil with Meaning வ்யாமோஹ ப்ரஶமௌஷத³ம் முனிமனோவ்ருத்தி ப்ரவ்ருத்த்யௌஷத⁴ம்தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபு⁴வனீ ஸஞ்ஜீவனை கௌஷத⁴ம் |ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனை கௌஷத⁴ம்ஶ்ரேய꞉ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன꞉ ஶ்ரீக்ருஷ்ணதி³வ்யௌஷத⁴ம் || 24 || விளக்கம்: ஓ மனமே! மயக்கங்களைத் தெளிவிக்கும் மருந்தும் முனிவர்களின் மனப்போக்கை இயக்கவைக்கும் மருந்தும் அரக்கர் தலைவருக்கு இன்னலளிக்கும் மருந்தும் மூவுலகங்களுக்கும் பிழைப்பிக்கும் சிறந்த மருந்தும் பக்தர்களுக்கு மிக்க இதமான மருந்தும் ஸம்ஸார பயத்தை அழிக்கும் சிறந்த மருந்தும் …